விஸ்வரூபம் எடுத்த வரி ஏய்ப்பு விவகாரம். ஸ்பெயின் இளவரசி பட்டம் இழந்தார்.

princessஸ்பெயின் நாட்டு இளவரசி கிறிஸ்டினா வரி ஏய்ப்பில் ஈடுபட்டது நிரூபணம் ஆகியுள்ளதால் அவர் இளவரசி பட்டத்தை இழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளவரசி பட்டம் பறிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் கிறிஸ்டினா கண்ணீர் விட்டு அழுததாக ஸ்பெயின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் மன்னர் 6வது பெலிப் அவர்களின் ஒரே தங்கை 49வது கிறிஸ்டினா அந்நாட்டின் இளவரசியாக இதுவரை வலம் வந்து கொண்டிருந்தார். இவரது கணவர் இனாகி உர்தாங்கரின் என்பவர் முன்னாள் ஒலிம்பிக் ‘ஹேண்ட்பால்’ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கிறிஸ்டினாவும், அவரது கணவரும் வரி ஏய்ப்பு செய்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டு தற்போது அது நிரூபணம் ஆகிவிட்டது. எனவே அவர் இளவரசி பட்டத்தை இழந்ததாக அரண்மனை வட்டாரங்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தி அரசு பத்திரிகையிலும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply