ஸ்பெயின் நாட்டு வரலாற்றிலேயே அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மோசடி வழக்கில் சிக்கி நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் தற்போதைய இளவரசி கிறிஸ்டினா என்பவர்.
ஸ்பெயின் இளவரசி மீது அவரது கணவர் மீதும் வரி ஏய்ப்பு மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்காக நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் இன்று காலை முதன்முதலாக அரச குடுமபத்தை சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கறிஞர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஸ்பெயின் இளவரசி தந்த பதில்கள் திருப்தியாக இல்லையென்றும், அவர் மழுப்பலான பதில்களையே கூறியுள்ளார் என்றும் அரசு வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் இளவரசியின் வழக்கறிஞர்கள் இதை மறுத்தனர். இளவரசி நீதிமன்றத்தில் முழு ஒத்துழைப்பு தந்ததாக தெரிவித்தனர். இதனிடையே ஸ்பெயின் நாட்டில் அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் அரச குடும்பத்தினரின் செல்வாக்கு வெகுவாக சரிந்துள்ளதாக கூறுகிறது.
[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”http://bit.ly/1ksarrY” standard=”http://www.youtube.com/v/uSnKb2t1VtY?fs=1″ vars=”ytid=uSnKb2t1VtY&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep1853″ /]