பிரேசில் நாட்டில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தற்போது நடந்து வருகிறது. முதல் போட்டியில் பிரேசில் குரோஷியா நாட்டை வென்றது.
நேற்று இரவு நடந்த ஒரு போட்டியில் ஸ்பெயின் அணியும், நெதர்லாந்து அணியும் மோதியது. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தது என்பதால் போட்டி மிகவும் கடுமையாக இருந்தது.
ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணியின் டீகோ கோஸ்டா முதல் கோல் அடித்து வெற்றிக்கணக்கை துவக்கினார். ஆனால் இதற்கு பதிலடி கொடுக்க நெதர்லாந்து அணிக்கு ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் கிடைத்த நல்லதொரு வாய்ப்பை அந்த அணியின் ரோபன் தவறவிட்டார்.
ஆனாலும் ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் வென் பெர்சி மிக அருமையாக தலையால் முட்டி ஒரு கோல் போட்டு 1-1 என்று சமன் செய்தார். அதன்பின்னர் நெதர்லாந்து நாட்டின் வீரர்கள் புது உத்வேகத்துடன் ஆக்ரோஷமாக விளையாடி அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புகளை கோலாக மாற்றி தொடர்ந்து நான்கு கோல்கள் போட்டனர். இறுதியில் நெதர்லாந்து அணி 5-1 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்ற்து. ஆட்டநாயகனாக நெதர்லாந்து அணியின் பெர்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.