நாடாளுமன்றத்தின் லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் தனக்கு எவ்வித கேள்வியும் கேட்கவில்லை என்றும் அது மத்திய அரசிடம்தான் கேள்விகேட்டுள்ளது என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் லோக்சபாவின் எதிர்க்கட்சி தலைவர் பதவி தகுதியில்லாத காங்கிரஸ் கட்சிக்கு வழங்க முடியாது என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறிவிட்ட நிலையில் இந்த விவகாரம் குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.
இதுகுறித்து செய்தியாளர்கள் சபாநாயகரிடம் நேற்று கேட்டபோது, ‘சுப்ரீம் கோர்ட் இந்த விஷயத்திற்கு பதிலளிக்க மத்திய அரசிடம்தான் கேள்வி கேட்டுள்ளது. என்னிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. எனவே இந்த கேள்விக்கு மத்திய அரசுதான் பதிலளிக்க வேண்டுமே தவிர நான் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.