சபாநாயகர் தனபால் மருத்துவமனையில் அனுமதி:

சபாநாயகர் தனபால் மருத்துவமனையில் அனுமதி:

தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் வயிற்றுக்கோளாறு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தனபால் அவர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனபால் அவர்களின் உடல்நிலை குறித்து அறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் அவருடைய உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். தனபால் அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply