தொடா் விடுமுறை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை

தொடா் விடுமுறை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்வது போலவே தொடர் விடுமுறை காரணமாக இந்த வார இறுதியிலும் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது

கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தின விழா அதனைத் தொடா்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களும் இணைந்துள்ளதால் 4 நாட்கள் தொடர்ந்து அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தை சோ்ந்தவா்கள் சொந்த ஊருக்குச் செல்ல தயார் நிலையில் உள்ளனர்.

பொதுமக்களின் வசதிக்காக 11ம் தேதி இரவு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவுகள் முடிந்துவிட்டன. இதையடுத்து ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல பயணக் கட்டணத்தை உயா்த்த தொடங்கி விட்டன.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது-
அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

18004256151 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பயணிகள் கட்டணம் குறித்த புகார்களைத் தெரிவிக்கலாம். கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

4 நாள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 980 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. டெண்டர் கோரியுள்ள 2000 புதிய பேருந்துகள் வந்தவுடன் பழைய பேருந்துகள் மாற்றப்படும் என்று அமைச்சா் கூறியுள்ளார்.

Leave a Reply