மருத்துவ கல்வி இயக்குனர் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவப் பணியாளர்களும் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
இதனை அடுத்து மருத்துவ பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்றும் அதையும் மீறி அவர்களுக்கு கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை செய்ய மருத்துவமனையில் சிறப்பு பிரிவு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படும் மருத்துவ பணியாளர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்
இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்படும் மருத்துவ பணியாளர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார்கள் என்பது உறுதியாகி உள்ளது