மத்திய அமைச்சரின் கடிதத்தில் எழுத்துப்பிழைகள். சுட்டிக்காட்டிய பள்ளி ஆசிரியை

மத்திய அமைச்சரின் கடிதத்தில் எழுத்துப்பிழைகள். சுட்டிக்காட்டிய பள்ளி ஆசிரியை

spellingமத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி சார்பில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பிய ஒரு கடிதத்தில் எழுத்து பிழை இருந்ததால், அதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் ஸ்ம்ரிதி இரானி. இவர் ராகுல்காந்தியை எதிர்த்து அமேதி தொகுதியில் போட்டியிட்டதால் அமைச்சரானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  இவர் சார்பாக இவரது அமைச்சகத்திலிருந்து, மாணவர்களின் செயல்திறன் குறித்து நாடு முழுவதும் பல்வேறு பள்ளி ஆசிரியர்களுக்கு ஓர் கடிதம் சமீபத்தில் அனுப்பப்பட்டது.
அந்த கடிதத்தில், மினிஸ்டர் (MINISTER) என்ற ஆங்கில வார்த்தையிலும், மற்றும் சன்சாதன் (sansadhan) என்ற இந்தி வார்த்தையிலும் எழுத்து பிழை இருந்துள்ளது. ஆனால் இந்த எழுத்துப்பிழையை அமைச்சர் உள்பட யாரும் கவனிக்கவில்லை. எழுத்துப்பிழையுடன் கடிதம் வந்திருப்பதை பார்த்த டெல்லி பப்ளிக் ஸ்கூலில் பணியாற்றும் ரிச்சா குமார் என்ற ஆசிரியை, எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டி அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில், ” “கடந்த 20 ஆண்டு காலமாக நான் இந்த ஆசிரியர் தொழிலில் உள்ளேன். ஒரு மொழி ஆசிரியராக உங்களது அமைச்சகத்திலிருந்து வந்த கடிதத்தின் தலைப்பு வாசகம் பிழையுடன் இருந்தது என்னை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது. தயவு செய்து  உங்களது அமைச்சகத்தில் உங்களுக்காக பணியாற்றுபவர்களை நன்கு படித்தவர்களாக பணி அமர்த்திக்கொள்ளுங்கள்” என்று எழுதியிருந்தார்.

அதுமட்டுமின்றி அந்த எழுத்துப்பிழை குறித்து அந்த ஆசிரியை தனது ஃபேஸ்புக் தளத்திலும் அவர் பதிவேற்றினார். இது வைரலாக பரவியதை தொடர்ந்து, இந்த விவகாரம் அமைச்சர் இரானியின் கவனத்திற்கும் சென்றது.  இதையடுத்து, எழுத்து பிழைகளுடன் கடிதம் அனுப்பியது குறித்து  விளக்கம் அளிக்குமாறு தனது துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply