நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சன் டிவி குழுமத்தின் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம்.

spicejetசன் டிவி அதிபர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் 10 நாட்களுக்குள் போதிய நிதியைத் திரட்டி விமான சேவையை முறையாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை தங்களால் மட்டும் நடத்த முடியாது என்றும், மத்திய அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என்றும் ஸ்பைஸ்ஜெட் மத்திய நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் எரிபொருள் வழங்கிய நிறுவனங்களுக்கு பல நூறு கோடிகள் பாக்கி வைத்துள்ளது. மேலும் ஊழியர்களுக்கும் கடந்த மூன்று மாதமாக ஊதியமும் கொடுக்கவில்லை.

இந்நிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு விமானங்கள் குத்தகைக்கு கொடுத்த நிறுவனங்களும் தங்கள் விமானங்களை திருப்பி எடுத்து சென்றுவிட்டதால் சமீபத்தில் தனது 1800 விமான சேவையை ரத்து செய்தது.

இந்நிலையில் ஸ்பெஸ் ஜெட் நிறுவனம் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ரூ.2000 கோடி மத்திய அரசு உடனடியாக நிதியுதவி வழங்கி நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் மத்திய நிதி அமைச்சகம் இதற்கு மறுத்துவிட்டது. கலாநிதி மாறனிடம் இருந்து போதிய பணம் பெற்று உடனடியாக முறையாக விமான நிறுவனத்தை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கடும் நெருக்கடியில் உள்ளது. இதே நிலைதான் சில மாதங்களுக்கு முன் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்திற்கும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply