நண்டு மசாலா

Crab Masala-jpg-1124

நண்டு சாப்பிட்டு பழகினவங்க நண்டை எப்படி செய்தாலும் ஒரு கை பாக்காம விட மாட்டாங்க… அதிலும் நண்டு மசாலாவா… சொல்லவே வேணாம்… நண்டு சாப்பிட்டு பழக்கமில்லாதவங்களும் ஒருதடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க.. அப்பறம் நீங்களும் இதுக்கு அடிமையாயிடுவீங்க….!

தேவையான பொருட்கள்:

நண்டு – 2 பெரியது
தேங்காய் (துருவியது) – 1/2 கப்
சின்ன வெங்காயம் – 25
மிளகாய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன்
சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கு
கடுகு – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கு

செய்முறை:

* நண்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

* சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

* தேங்காய், இரு சின்ன வெங்காயம், சீரகம், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து பின்பு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும்.

* வெங்காயம் சிறிது வதங்கிய பின் நண்டைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

* பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

* இரண்டு நிமிடங்கள் கிளறவும். பின்பு வாணலியை மூடி வைத்து தீயை மெலிதாக வைக்கவும்.

* இடையிடையே கிளறி விடவும்.

* 15 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.

* நண்டில் இருக்கும் தண்ணீ­ர் வற்றி வரண்டு வரும்போது தீயை அணைத்து விடவும்.

* சாதத்துடன் பரிமாற நண்டு மசாலா தயார்.

Leave a Reply