மீன் குழப்பு

மீன் குழப்பு

தேவையான பொருட்கள் :

மீன்
நல்லெண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை
காய்ந்த மிளகாய்
வெந்தயம்
சாம்பார் வெங்காயம் – 150 கி
பூண்டு
தக்காளி – 150 கி
புளி – எலுமிச்சை பழ அளவு

மஞ்சள தூள்
மிளகாய் தூள்
தனியா தூள்
உப்பு
கொத்தமல்லி
தேங்காய் பால் – அரை கப்
மிளகு தூள்
இஞ்சி பூண்டு விழுது

செய்முறை :

• வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• பூண்டை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

• கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

• அடுத்து பூண்டை போட்டு வதக்கவும்.

• பூண்டு முக்கால் பாகம் வேகும் வரை வதக்கவும்.

• தக்காளி பழத்தை போட்டு வதக்கவும்.

• நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், இஞ்சி பூண்டு விழுது  போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

•  மசாலா திக்கானதும் புளி கரைசலை சேர்க்கவும்.

• தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

• மீனை உப்பு, மஞ்சள் தூள் எலுமிச்சை சாறு போட்டு பிசைந்து வைக்கவும்.

• குழம்பு ஒரு கொதி வந்து திக்கானவுடன் மீனைப் போடவும். மிளகு தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலையை போடவும்.

• மீன் வெந்தவுடன் தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Leave a Reply