தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 4 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது)
பிரியாணி இலை – 1
மிளகுத் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஊற வைத்துள்ள சிக்கனை குக்கரில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்கி விட வேண்டும். பின் அதில் வேக வைத்துள்ள சிக்கனை அப்படியே வாணலியில் போட்டு, மிளகுத் தூள், கசகசா சேர்த்து, குறைவான தீயில் நன்கு பச்சை வாசனை போக பிரட்டி இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், பெப்பர் குடைமிளகாய் சிக்கன் ரெடி!!!