தேவையான பொருட்கள் :
முட்டைகள் – 4
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
வெண்ணெய் – சிறிதளவு
தயிர் – 1/2 கப்
வெள்ளரி – 1
புதினா – சிறிதளவு
பசலைக் கீரை – 1 கப்
உப்பு – சிறிதளவு
மிளகு தூள் – சிறிதளவு
செய்முறை :
• புதினா, வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி கரம் மசாலா தூள், உப்பு, குளிர்ந்த நீர் ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.
• தோவை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் போட்டு உருகியதும் முட்டை கலவையை ஊற்றி நன்றாக பரப்பி விடவும்.
• வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
• ஒரு கிண்ணத்தில் தயிர், புதினா, வெள்ளரிக்காய் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
• ஆம்லெட்டை தட்டில் வைத்து அதன் மேல் பசலைக்கீரையை நன்றாக பரப்பி ரோல் செய்யவும். ரோல் செய்த ஆட்லெட்டை இரண்டாக வெட்டி அதன் மேல் மிளகு தூள் தூவவும்.
• தயிர் கலவையுடன் ஆம்லெட்டை சேர்த்து பரிமாறவும்.