ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்து, சாக்சி மாலிக் உள்பட 4 பேருக்கு கேல்ரத்னா விருது

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சிந்து, சாக்சி மாலிக் உள்பட 4 பேருக்கு கேல்ரத்னா விருது

awardசமீபத்தில் நடைபெற்று முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த சாக்‌ஷி மாலிக் மற்றும் தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்), ஜித்து ராய் (துப்பாக்கி சுடுதல்) ஆகியோர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகளை வழங்கி கெளரவித்தார். நேற்று புது டெல்லியில் நடைபெற்ற விளையாட்டு விருது வழங்கும் விழாவில், வீரர்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டன.

விருது பெற்றவர்களின் முழு விவரம் பின்வருமாறு:

2016-ம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது –

பி.வி. சிந்து (பாட்மிண்டன்),

சாக்‌ஷி மாலிக் (மல்யுத்தம்),

திபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்),

ஜித்து ராய் (துப்பாக்கி சுடுதல்) ஆகியோருக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

2016-ம் ஆண்டுக்கான துரோணாச்சாரியார் விருது

நாகபுரி ரமேஷ் (தடகளம்),

சாகர்மால் தயாள் (குத்துச்சண்டை),

ராஜ்குமார் சர்மா (கிரிக்கெட்),

பிஸ்வேஷ்வர் நந்தி (ஜிம்னாஸ்டிக்ஸ்), எஸ். பிரதீப் குமார் (நீச்சல்),

மகாபிர் சிங் (மல்யுத்தம்) ஆகியோருக்குத் துரோணாச்சாரியார் விருது வழங்கப்பட்டது.

2016-ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருது பெற்ற வீரர்கள்

ரஜத் செளகான் (வில்வித்தை),

லலிதா பாபர் (தடகளம்),

செளரவ் கோத்தாரி (பில்லியர்ட்ஸ் & ஸ்னூக்கர்),

ஷிவ தாபா (குத்துச்சண்டை),

ரஹானே (கிரிக்கெட்),

சுப்ரதா பால் (கால்பந்து),

ராணி (ஹாக்கி),

வி.ஆர். ரகுநாத் (ஹாக்கி),

குர்ப்ரீத் சிங் (துப்பாக்கி சுடுதல்),

அபூர்வி சண்டேலா (துப்பாக்கி சுடுதல்),

செளம்யாஜித் கோஷ் (டேபிள் டென்னிஸ்),

வினேஷ் போகட் (மல்யுத்தம்),

அமித் குமார் (மல்யுத்தம்),

சந்தீப் சிங் மன் (பாரா-தடகளம்),

விரேந்தர் சிங் (மல்யுத்தம்) ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

2016-ம் ஆண்டுக்கான தயான்சந்த் விருது

சாத்தி கீதா (தடகளம்),

சில்வேனஸ் துங் துங் (ஹாக்கி),

ராஜேந்திர பிரஹலாத் ஷெல்கே (படகு) ஆகியோருக்கு தயான்சந்த் விருது வழங்கப்பட்டது.

விருது பெற்றவர்கள், பதக்கம் மற்றும் ரூ.7.5 லட்சம் தொகையைப் பரிசாகப் பெற்றனர். அர்ஜுனா, துரோணாச்சாரியா, தயான் சந்த் விருது பெற்றவர்களுக்கு ரூ.5 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.

Leave a Reply