சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள் மீது மிளகாய் பொடி வீச்சு: அதிர்ச்சி வீடியோ
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தபோதிலும் இன்னும் ஒருசில அமைப்பினர் சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சபரிமலைக்கு செல்ல முயன்ற கேரளாவைச் சேர்ந்த 2 பெண்கள் மீது மிளகாய் பொடி மற்றும் பெப்பர் பொடி ஸ்ப்ரே செய்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சபரிமலைக்கு செல்வதற்காக திருப்தி தேசாய், பிந்து , அம்மிணி உள்பட ஐந்து பெண்கள் கொச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி பெற்றுவிட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த போது, ஐயப்ப கர்ம சமிதி அமைப்பை சேர்ந்த சிலர் திடீரென பிந்து மீது மிளகாய் பொடி ஸ்பிரே தூவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து, கர்ம சமிதி அமைப்பினரை கைது செய்து, பின்னர், பெண்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்
Shocking visuals of pepper/ chilli spray being sprayed at Bindu Ammini outisde the commissioner office by one of the protesters . She has been moved to the hospital. Six other women including Trupti Desai inside the police commissioner's office. #Sabarimala #Kerala @ndtv pic.twitter.com/d24chgs8b3
— Sneha Koshy (@SnehaMKoshy) November 26, 2019