பஞ்சாபில் பிடிபட்டது பாகிஸ்தானின் உளவு புறாவா? பெரும் பரபரப்பு

pigeonபாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவை உளவு பார்க்க புறா ஒன்று அனுப்பப்பட்டதாகவும் அந்த புறா பஞ்சாப் மாநிலத்தில் பிடிபட்டதாகவும் வெளியான தகவல் நாடு முழுவதையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் மாவட்டத்தில் மன்வால் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் சந்த் என்பவரிடம் புறா ஒன்று பிடிபட்டது. இந்த புறாவின் இறகுகளில் “ஷகர்கால் தாலுகா, நாரோவல் மாவட்டம் என இறகுகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. மேலும், சில எண்களும் உருது எழுத்துகளும் முத்திரையிடப்பட்டிருந்தன. எனவே இந்த புறா பாகிஸ்தான் நாட்டின் உளவுப்புறாவாக இருக்கலாம் என சந்தேகம் அடைந்த ரமேஷ் சந்த், உடனே அந்த புறாவை அருகிலுள்ள காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

இந்த புறாவை பரிசோதனை செய்த காவல்துறையினர் அதன் உடலில் எங்கேனும் கேமரா அல்லது வேறு பொருட்கள் உள்ளனவா என பரிசோதித்தனர். ஆனால், எதுவும் அகப்படவில்லை. புறாவின் இறகுகளில் உள்ள எண்கள் குறித்தும் ஆய்வு செய்த போலீஸார் பின்னர் உளவுத்துறை, எல்லைப்பாதுகாப்புப் படை உட்பட பாதுகாப்பு படையினரை இது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.

Leave a Reply