ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலில் அமைந்துள்ள பெரியாழ்வார் சன்னதியில் திருஆனி ஸ்வாதி உற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
காலை 8.30 மணிக்கு கொடிபட்டம் மாடவீதிகளில் சுற்றி வர, கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. வாசுதேவன் பட்டர் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றினார். அனந்தராமன் பட்டர், ஸ்தானிகர் ரமேஷ் மற்றும் கோயில் பட்டர்கள் பங்கேற்றனர். திரளான பக்தர்கள் பெரியாழ்வாரை தரிசனம் செய்தனர். பின்னர் கோபுரத்தெருவில் உள்ள ஆழ்வார் ஐய்யங்கார் மண்டபத்தில் பெரியாழ்வார் எழுந்தருளினார்.இரவு தோளுக்கினியான் வாகனத்தில் பெரியாழ்வார் ரதவீதிகளில் உலா வந்தார். வரும் 28 வரை திருவிழா நடக்கிறது. பகலில் மண்டபங்களில் பெரியாழ்வார் எழுந்தருளி இரவு பல்வேறு வாகனங்களில் ரதவீதிகளில் உலா வருகிறார். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா செய்தனர்.