நஸ்ரியாவின் இடத்தை பிடித்தார் ஸ்ரீதிவ்யா.

samantha and sridivyaமலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘பெங்களூர் டேய்ஸ்’ திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் சித்தார்த் மற்றும் சமந்தா நடிக்கவுள்ளதாக முதலில் செய்திகள் வெளிவந்தது. ஆனால் சித்தார்த்-சமந்தாவின் காதல் பிரேக் அப் ஆனதை தொடர்ந்து இவர்கள் இருவருமே இந்த படத்தில் நடிக்கவில்லை என சில நாட்களுக்கு முன்னர் மறுத்தனர்.

தற்போதைய தகவலின்படி இந்த படத்தில் சித்தார்த்துக்கு பதில் ரானா டகுபாத்தியும் சமந்தாவிற்கு பதிலாக ஸ்ரீதிவ்யாவும் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன. இவர்கள் இருவரும் மலையாளத்தில் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா நடித்த கேரக்டரில் நடிக்கவுள்ளனர்.

ஏற்கனவே இந்த படத்தின் தல்கூர் சல்மான் வேடத்தில் ஆரியும், நிவின் பாலி வேடத்தில் பாபி சிம்ஹாவும் நடிக்கவுள்ளனர் என்ற செய்தி நாம் அறிந்ததுதான்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் மார்ச் 20ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும் அதன் பின்னர் சிங்கப்பூரில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர். மலையாளத்தில் பெங்களூரை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட திரைக்கதை இந்த படத்தில் சிங்கப்பூரில் மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ள இந்த படத்தை பொம்மரிலு பாஸ்கர் இயக்கவுள்ளார்.

Leave a Reply