இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வற்புறுத்தும் ஜெயலலிதா மற்றும் இலங்கை அரசு மிரட்டி வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரின் செயல்பாடுகளை எதிர்த்து இலங்கை தலைநகர் கொழும்புவில் சிங்களர்வர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் இடையே பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதா உருவப்பொம்மைகளை எரித்ததால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
பிரதமர் மோடி பதவியேற்புவிழாவுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி 1’3வது சட்டத்திருத்தத்தை அமல் படுத்துமாறு, கோரிக்கை விடுத்தார். மேலும் தமிழக மீனவர்கள் அடிக்கடி சிங்கள படையினர் கைது செய்வதால், இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அடிக்கடி கடிதம் எழுதி வலியுறுத்தி வருகிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் சிங்களர்கள் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய வசந்த பண்டார, “‘இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்&அமைச்சர் ஜெயலலிதா, வலியுறுத்துவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது’ என்றார். பெங்முவே நலகா என்ற புத்த சாமியார் கூறுகையில், ‘ஜெயலலிதா, இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறார். இலங்கையில் தற்போது நிலவும் அமைதியை குலைக்க முயற்சிப்பதை ஏற்கமாட்டோம்’ என்று கூறினார்.
பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதா உருவப்பொம்மை எரிக்கப்பட்டதற்கு இலங்கைத்தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வந்தது.