இலங்கை சுப்ரீம் கோர்ட்டின் 44-வது தலைமை நீதிபதியாக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 63 வயது கனகசபாபதி ஸ்ரீபவன் அவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்ததால் அவரால் நியமனம் செய்யப்பட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதி மோகன் பெரிஸ் பதவி விலக வற்புறுத்தப்பட்டது. இதனால் மோகன் பெரிஸ் பதவி விலகினார்.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இதற்கு முன்னால் இருந்த ஷிரானி பண்டாரநாயக்கா கடந்த புதன்கிழமை பதவி ஏற்றார். ஆனால் பதவியேற்ற ஒரேநாளில் நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் சுப்ரீம் கோர்ட் நீத்பதி பதவி காலியாக இருந்தது. இதையடுத்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவின் பேரில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 63 வயது ஸ்ரீபவன் அவர்கள் இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.
இலங்கை சுப்ரீம் கோர்ட்டின் 44-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள ஸ்ரீபவன் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த முதல் நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.