முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான கோத்தபய ராஜபக்சே ஆயுத வழக்கில் சிக்கியுள்ளதால் இந்த வழக்கின் விசாரணை முடியும்வரை இலங்கையிஐ விட்டு செல்லக்கூடாது என்று அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அதிபர் ராஜபக்சே படுதோல்வியடைந்தையடுத்து, கடந்த ஜனவரி மாதம் காலே துறைமுகத்தில் மிதந்த ஆயுதக்கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கப்பலில்12 கண்டெய்னர்களில் ஏராளமான ஆயுதங்கள் இருந்ததாகவும், இதனை பராமரித்து வந்த தனியார் நிறுவனம், சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பலை பாதுகாப்பதற்கு போதிய பாதுகாப்பும் வழங்கி வந்ததாகவும் தகவல் வெளியானது. ஆயுதக்கிடங்கு பாதுகாப்பிற்கு தனியார் நிறுவனம் பயன்படுத்தப்பட்டதால் கடற்படைக்கு அதிக வருவாய் இழப்பு ஏற்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும் ராஜபச்சேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு இன்று காலே துறைமுக நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை முடியும் வரை கோத்தபய ராஜபக்சே மற்றும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள மேலும் 3 பேர் நாட்டை விட்டு செல்வதற்கு கோர்ட் தடை உத்தரவு பிறப்பித்தது.