இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி. அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறினார்.

rajapakseஇலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனா அபார வெற்றி பெற்றுள்ளார். அவர்  இன்றே புதிய அதிபராக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.

இலங்கை அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா இதுவரை 32,72,965 வாக்குகள் பெற்றுள்ளார். அவர் ராஜபக்சேவைவிட 3,66,379 வாக்குகள் முன்னிலையில் உள்ளதால் ஸ்ரீசேனாவின் வெற்றி உறுதியாகியுள்ளது.  ராஜபக்சே 29,24,398 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

தமிழர்கள் பகுதிகளான முல்லைதீவில் 78.94% வாக்குகளும், சாவகச்சேரியில் 77,23% வாக்குகளும், காங்கேசன் துறையில் 55.48% வாக்குகளும், கிளிநொச்சியில் 72.11% வாக்குகளும் மைத்திரிபால சிறிசேனாவுக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் சிறிசேனா 53.00 சதவீத வாக்குகளையும் ராஜபக்சே 46.00 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளார்.

அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து உடனடியாக இன்று காலையே அதிபருக்கான அதிகாரப்பூர்வ மாளிகையான அலறி மாளிகையில் இருந்து வெளியேறி உள்ளார். சற்றுமுன்னர் அமைச்சரவை கூட்டத்தை கூட்டிய அதிபர் ராஜபக்சே, தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்ததோடு தோல்வியை ஒப்புக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply