ராஜபக்சேவின் தோல்விக்கு இந்திய ‘ரா’ நிறுவனம் முக்கிய காரணமா? திடுக்கிடும் தகவல்

rajapakseஇலங்கையில் அதிபராக இருந்த ராஜபக்சேவை வீழ்த்த இலங்கையின் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டியதில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருந்ததாக திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. ஆனால் இந்த தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.
 
சமீபத்தில் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 3வது முறையாக போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக. எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறாலம் இருக்க பொது வேட்பாளராக சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் இப்படி ஒரு ஆலோசனை எதிர்க்கட்சிகளிடம் இல்லை என்றும், இந்தியாவின் ஆலோசனையால்தான் எதிர்க்கட்சி பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டதாகவும் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.

எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட முக்கிய பேச்சுவார்த்தைகளை இந்திய உளவு அமைப்பான ராவின் கொழும்பு நகரின் தலைவர் முக்கிய பங்கு வகித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு இலங்கை அரசு கேட்டுக்கொண்டதாகவும், அதன் காரணமாகவே அவரை இந்தியா திரும்ப அழைத்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இலங்கை தூதரக அதிகாரிகளின் பணிக்காலம் வழக்கமாக 3 ஆண்டுகள்தான் என்றும், பணிக்காலம் முடிவடைந்ததை அடுத்தே அந்த அதிகாரி இந்தியா திரும்பியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply