ராஜபக்சேவின் சொந்த மாவட்டத்தில் இயங்கிய விமான நிலையத்திற்கு மூடுவிழா.

airportமுன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சொந்த மாவட்டத்தில் திறக்கப்பட்ட சர்வதேச விமானநிலையத்தை மூடவும், அதில் இயங்கி வந்த அனைத்து சேவைகளையும் நிறுத்த புதிய அரசு உத்தரவிட்டுள்ளது.

ராஜபக்சேவின் சொந்த உபயோகத்திற்கு மட்டுமே திறக்கப்பட்ட மத்தளம் மாவட்ட விமான நிலையத்தில் விமான சேவை செய்ய எந்த தனியார் விமானங்களும் முன்வராததால் அந்த விமான நிலையம் நஷ்டத்தில் இயங்கி வந்தது. இதனால் இந்த விமான நிலைய சேவையை உடனடியாக நிறுத்த புதிய அதிபர் மைத்ரிபாலா ஸ்ரீசேனா உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து கட்டுநாயக்க – மத்தள இடையேயான  உள்ளூர் விமான சேவைகள் வரும் நாளை முதல் நிறுத்தப்படும் என்று கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்தள விமான நிலையத்தினால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதால் இந்த விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வரும் பிப்ரவரி 9ஆம் தேதியுடன் நிறுத்தப்படுவதாக இலங்கை விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

Leave a Reply