இலங்கையின் புதிய ஜனதாபதி சிறிசேனா இந்தியா வருகை.

srisena
கடந்த மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை வீழ்த்தி புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள சிறிசேனா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு தரப்பு பிரச்சனைகள்  குறித்து ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று பாரதப் பிரதமரை சந்தித்துப் பேச்சுநடத்தும் சிறிசேனா நாளை  புத்தகயா மற்றும் திருப்பதி ஆகிய தலங்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, 18ஆம் தேதி அவர் நாடு திரும்பவுள்ளார்.

இருநாட்டு பொருளாதாரம், அமைதி மற்றும் இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுநடத்துவார்கள் என்று இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் பத்திரிகைகளுக்கு தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தில் அமைச்சர்களான ராஜித்த சேனாரத்தன, சம்பிக்க ரணவக்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

Leave a Reply