ஏப்ரல் 23ஆம் தேதிக்கு பின்னர் மோடியின் கோரிக்கை பரிசீலனை. இலங்கை அதிபர் சிறிசேனா

modi and srisenaகடந்த வாரம் இலங்கைக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் செய்த பாரத பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் சிறிசேனாவை சந்தித்தபோது, தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண 13 ஆவது  அரசியல் சட்ட திருத்தத்தை விரைவில் முழுமையாக அமல்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கைக்கு நேற்று பதிலளித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அதிபர் சிறிசேனா, “தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான 13 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும்’ என்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோள் கவனிக்கப்படும்.

இலங்கை அதிபர் பதவி காலத்தை 6 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைக்க 19 ஆவது  அரசியல் சட்ட திருத்தம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அதன் பிறகு, ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு மேல் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும். பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் இந்திய பிரதமரின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் இலங்கை குறித்த சர்வதேச கருத்தும் மாறி வருகிறது என்றும் லண்டனில் தன்னை இங்கிலாந்து ராணியும், பிரதமர் டேவிட் கேமரூனும் அன்புடன் வரவேற்றுள்ளதாகவும், இதன் மூலம் இங்கிலாந்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐரோபிய நாடுகளையும் கவர இலங்கை அரசு முயன்று வருவதாகவும் கூறினார்.

Leave a Reply