உள்ளாடைகளை கழற்றி எறிந்த இலங்கை இளம்பெண்கள். அதிபர் மைத்ரிபாலா அதிர்ச்சி
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் குமார சங்ககாரா மற்றும் மகிலா ஜெயவர்தனே ஆகிய இருவரும் இணைந்து லைவ் இவென்ட்ஸ் என்ற நிகழ்ச்சியை கடந்த வாரம் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் லத்தீன் மொழி பாப் பாடகர் என்ரிக் இக்லேசியாஸ் கலந்து கொண்டார். உலகப்புகழ் பெற்ற பாடகரான இவர் மேடையில் “லவ் அன்ட் செக்ஸ்” என்ற தலைப்பில் பாடல்களை பாடியபோது உற்சாக மிகுதியில் பார்வையாளர்கள் எழுந்து நடனம் ஆடினர்.
குறிப்பாக இளம்பெண்கள் தாங்கள் அணிந்திருந்த உள்ளாடைகளை கழற்றி பாப் பாடகரின் மீது எறிந்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். ஒருசிலர் மேடையேறி பாடகருக்கு முத்தம் கொடுத்த நிகழ்ச்சியும் நடந்தது.
புத்தரின் கொள்கைகளை கடைபிடித்து வரும் இலங்கையில் இதுபோன்ற நிகழ்வுகள் தன்னை அதிர்ச்சியடைய வைத்ததாக இலங்கை அதிபர் மைத்ரிபாலா தெரிவித்துள்ளார். நமது நாட்டின் கலாசாரத்துக்கு எதிரான அநாகரிகமான செயல்களை அனுமதிக்க முடியாது என்றும் பொது இடத்தில் தங்களது உள்ளாடைகளை கழற்றிய பெண்களை கொடிய விஷத்தனமை கொண்ட மீனின் வாலால் அடிக்க வேண்டும் என நான் வாதாட மாட்டேன். எனினும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை திருக்கை வால் சாட்டையால் அடிக்க வேண்டும் என்றும் தனது ஆதங்கத்தை அதிபர் வெளிப்படுத்தியுள்ளார்.
அதிபரின் இந்த கருத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த கிரிக்கெட் வீரர்கள் குமார சங்ககாரா மற்றும் மகிலா ஜெயவர்தனே ஆகிய இருவருக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
Chennai Today News: Sri Lanka President says Enrique Iglesias concert organisers should be ‘whipped