இலங்கையில் அகதிகள் என்ற பெயரில் நீடித்திருக்கும் 1500 பாகிஸ்தானியயர்கள் உடனே தங்கள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவினால் சுமார் 1500 பாகிஸ்தானியர்கள் இலங்கையிலிருந்து இந்த வாரத்திற்குள் வெளியேறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. . இவர்களில் பலர் பாகிஸ்தானால் தடை செய்யப்பட்டுள்ள அகமதியா மர்றும் ஷியா முஸ்லிம்கள் ஆவார்கள்.
இந்த அறிவிப்பும் ஐ.நா மனித உரிமை ஆர்வலர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பினும் இந்த முடிவில் ராஜபக்சே உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இனி இலங்கைக்குப் பயணம் செய்யும் பாகிஸ்தானியர்கள் முன்கூட்டியே விசா அனுமதி பெறவேண்டும் என்றும் இலங்கை அரசு நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தானின் தீவிரவாதிகள் பலர் இலங்கை மற்றும் மாலத்தீவு வழியாக எளிதாக இந்தியாவில் நுழைந்து தீவிரவாத செயல்களை செய்வதாகவும், இதுகுறித்து கடும் நடவடடிக்கை எடுக்க இந்திய பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்கிணங்க ராஜபக்சே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இலங்கையை அடுத்து மாலைத்தீவில் உள்ள பாகிஸ்தானியர்களும் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.