சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்ற அதிபர் சிறிசேனா, சீனாவுடனான உறவில் மிகுந்த கவனமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. சீன உதவியுடன் கடந்த ராஜபக்சே ஆட்சியில் தலைநகர் கொழும்பில் துறைமுக நகரை அமைக்கும் திட்டத்தை இலங்கை அரசு திடீரென நிறுத்தி வைத்துள்ளது.
ரூ.9,335 கோடி மதிப்பிலான இந்த துறைமுகத்தை ஏற்படுத்த நாடாளுமன்றத்தின் அனுமதி பெறாமலே சீனாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், விதிமுறைகளைப் பின்பற்றாமல் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஊழலில் ஈடுபட்டதாகவும் ராஜபட்ச மீது தற்போதைய அதிபர் சிறீசேனா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறுகையில், “”துறைமுக நகரை அமைப்பதற்காக சீன நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்க முடியாத நிலை உள்ளது. எனவே இந்த ஒப்பந்தம் குறித்து மறுஆய்வு செய்வதற்காகவே அந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.