ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை: தென்னாப்பிரிக்காவிடம் இலங்கை தோல்வி

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை: தென்னாப்பிரிக்காவிடம் இலங்கை தோல்வி

Sri Lanka’s Kusal Perera (R) plays a shot as South Africa’s Quinton de Kock looks on during the ICC Champions Trophy match between South Africa and Sri Lanka at The Oval in London on June 3, 2017. / AFP PHOTO / Ian KINGTON / RESTRICTED TO EDITORIAL USE

இங்கிலாந்து நாட்டில் கடந்த 1ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதின

இந்த போட்டியில் டாஸ்  வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவெடுத்ததல், முதலில் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆம்லா, மிக அபாரமாக விளையாடி சதமடித்தார். அவருக்கு ஈடுகொடுத்த டீபிளஸ்ஸிஸ் 75 ரன்கள் அடித்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 299 ரன்கள் எடுத்திருந்தது.

300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்தபோதிலும் அடுத்தடுத்த வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 41.3 ஓவர்களில் 203 ரன்களுக்கு அனைத்து  விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் தென்னாப்பிரிகக அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய தென்னாப்பிரிககவின் இம்ராஜ் தாஹிர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இன்று பரபரப்பான இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது.

Leave a Reply