மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியா? உச்சநீதிமன்றத்திடம் கருத்து கேட்ட ராஜபக்சே

rajapakseஏற்கனவே இரண்டு முறை தேர்தலில் நின்று வெற்றி பெற்று அதிபராக இருக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சே மூன்றாவது முறையாக மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இதுகுறித்து மகிந்தா ராஜபக்சே இலங்கை உச்ச நீதிமன்றத்துக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், ‘மீண்டும் தான் அதிபர் பதவியை ஏற்பதற்குத் தடையாக, சட்டச் சிக்கல் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து தனக்கு வரும்10-ஆம் தேதிக்குள் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக இலங்கை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜபட்சவின் பதவிக் காலம் வரும் 2015ஆம் ஆண்டு நிறைவடைகிறது. அவ்வாறு இலங்கை உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தால் முன்கூட்டியே தேர்தல் நடத்த ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இலங்கை அரசின் சட்டத்தின்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும் என்பதால் ராஜபக்சே மீண்டும் ஒரு முறை போட்டியிட முடியாது என எதிர்க் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், உச்ச நிதிமன்றம் இந்த விவகாரத்தில் தெரிவிக்கும் கருத்து, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது

Leave a Reply