இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வரும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இலங்கை அரசு சட்டப்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால் அதிபர் ராஜபக்சே அரசியல் சட்டத்தை திருத்தி, இலங்கை சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியை பெற்று மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ராஜபக்சேவை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக மைத்ரிபாலா சிரிசேனா போட்டியிடுகிறார். அவரும் இன்று மனுதாக்க செய்தார். இருவரும் ஒரே நாளில் வேட்புமனு செய்துள்ளது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. தற்போதையை நிலையில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை கணித்து கூற முடியாத நிலையில் உள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது.