இலங்கை அதிபர் தேர்தல். எதிர்க்கட்சி வேட்பாளர் முன்னிலை.

srilanka

இலங்கையின் 7வது ஜனாதிபதி தேர்தலின் அதிகாரபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. வாக்குப்பதிவு தொடங்கியது முதற்கொண்டே, பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

இதுவரை இல்லாத அளவில் மக்கள் ஆர்வமுடன் வாக்குச் சாவடிக்கு வந்து ஓட்டளித்தனர். குறிப்பாக, தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணம் மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் வடமேற்கு பகுதிகளில், ஓட்டுப்பதிவு பரபரப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் கடைசியாக கிடைத்த தகவலின்படி மைத்திரி பால ஸ்ரீசேனா முன்னிலை வகிக்கிறார்.
 
இலங்கை நேரம் காலை 6.30 மணி நிலவரப்படி அதிபர் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:

மைத்திரிபால ஸ்ரீசேனா 14,06,557(52.49%) வாக்குகள்

மஹிந்த ராஜபக்சே 12,38,340 (46.21%) வாக்குகள்

சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மைத்திரிபால ஸ்ரீசேனா முன்னிலை வகிப்பதால் அவர் அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply