பிரபல நடிகரின் தம்பியுடன் ஸ்ரீதேவி மகள் காதலா?

பிரபல நடிகரின் தம்பியுடன் ஸ்ரீதேவி மகள் காதலா?

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் தற்போது ஜான்வி தற்போது முதல் படத்தில் நடித்து வருகிறர். கரண்ஜோஹர் தயாரித்து வரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜான்விக்கு அதற்குள் காதல் எட்டிப்பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ஜான்விகபூர் மற்றும் நடிகர் இஷான் கட்டார் ஆகிய இருவரும் திரையரங்கில் ஒன்றாக இருந்ததாகவும், அதுமட்டுமின்றி பல இடங்களுக்கு பார்ட்டி என ஊர் சுற்றுவதாகவும் பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த விஷயம் இஷானின் அண்ணனும் பாலிவுட் நடிகருமான ஷாஹித் கபூருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

முதல் படம் வெளியாக உள்ள நேரத்தில் அவர் ஜான்வியுடன் ஊர் சுற்றி பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் எனறு ஷாஹித் எச்சரித்துள்ளாராம். ஏற்கனவே ஜான்வி முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியாவை காதலித்ததாக கூறப்பட்டு இருவரும் லிப் டு லிப் முத்தம் கொடுத்த புகைப்படம் இணையதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply