1990ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் சிங்கள அரசுக்கு எதிராக நடத்திய போரின்போது சுமார் 100 முஸ்லீம்களை கொன்று புதைத்ததாக தற்போது திடுக்கிடும் புகார் ஒன்றை இலங்கையை சேர்ந்த முஸ்லீம் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
1990ஆம் ஆண்டு இலங்கைக் கிழக்குப் பகுதியில் விடுதலைப்புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை அவர்கள் கொலை செய்து புதைத்ததாக எழுந்த புகார் ஒன்றை காத்தங்குடியை சேர்ந்த முஸ்லீம் ஒருவர் தற்போது போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அவர் குறிப்பிட்ட இடத்தைத் தோண்டி சோதனை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
ஜூலை 1ஆம் தேதி அரசு பாதுகாப்புடன் அந்த நபர் குறிப்பிட்டு சொன்ன இடத்தை தோண்ட இருப்பதாக இலங்கை அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இலங்கையில் முஸ்லீம்கள் தாக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த புதிய புகாரினால் இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் பெரும் பதட்டம் நிலவுவதாக கூறப்படுகிறது.