மீனவர்களை எச்சரிக்க எல்லை பலகை. இலங்கையின் புதிய முயற்சி

மீனவர்களை எச்சரிக்க எல்லை பலகை. இலங்கையின் புதிய முயற்சி

தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டி மீன் பிடிப்பதால் கைது நடவடிக்கை, படகுகள் பறிப்பு ஆகியவை தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடல் எல்லை குறித்த விழிப்புணர்வை மீனவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் இதனால் மீனவர்கள் கடல் எல்லையை அறிந்து அதனை தாண்டமல் மீன் பிடிப்பார்கள் என்றும் அவ்வப்போது மத்திய மாநில அரசுகளுக்கு சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மீனவர்களுக்கு எல்லை குறித்து அறிவுறுத்தும் வகையில் அந்நாட்டு அரசு எல்லைப்பலகை ஒன்றை அமைத்துள்ளது. இலங்கையில் இருந்து 5-வது மணல்திட்டில் இலங்கை கொடியுடன் இந்த பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்க இந்த பலகை வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறித்துள்ளத்ஜு.

ஏற்கனவே இதே போன்ற ஒரு எல்லை பலகையை தனுஷ்கோடியில் இருந்து 5-வது மணல்திட்டில் இந்தியஅரசு வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply