வட மாகாண முதல்வரை கொல்ல தெற்கு இலங்கை சக்திகள் சதியா?

வட மாகாண முதல்வரை கொல்ல தெற்கு இலங்கை சக்திகள் சதியா?

vigneshwaranஇலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியான வடக்கு மாகாணத்தின் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை கொலை செய்ய தெற்கு இலங்கையில் உள்ள சில சக்திகள் சதி செய்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவலை முதல்வர் விக்னேஸ்வரன் ஒரு விழாவில் உறுதி செய்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் முதல்வர் விக்னேஸ்வரனின் உரை வாசிக்கப்பட்டது. அந்த உரையில் அவர் கூறியிருப்பதாவது: “என்னைக் கொலை செய்யவும் அந்தப் பழியை விடுதலைப்புலிகள் மீது சுமத்தவும் சதி நடப்பதாக எனக்கு தொடர்ந்து தகவல் வருகிறது என்று திடுக்கிடும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ‘எழுகத் தமிழ்’ பேரணி நடந்த ஒரு வாரத்தில் விக்னேஸ்வரன் இக்குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். வட இலங்கையில் ராணுவமயமாக்கல் மற்றும் சிங்கள குடியேற்றத்துக்கு எதிராக இப்பேரணி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்ற இப்பேரணி 2002- 2004-ல் எல்டிடிஇ தொடர்புடைய பொங்கு தமிழ் பேரணியுடன் ஒப்பிடப்படுகிறது.

மேலும் சிங்களர்களின் உரிமைக்காக ‘பொடு பால சேனா (பிபிஎஸ்)’ என்ற சிங்கள பவுத்த அமைப்பு, தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வவுனியாவில் போராட்டம் நடத்திய சில நாட்களில் இக்குற்றச்சாட்டை விக்னேஸ்வரன் சுமத்தியுள்ளார்.

Leave a Reply