இலங்கை அதிபரின் திருப்பதி விஜயம் ரகசியமாக வைக்கப்பட்டது ஏன்?

இலங்கை அதிபரின் திருப்பதி விஜயம் ரகசியமாக வைக்கப்பட்டது ஏன்?

Maithripala_Sirisena_new_AFP_650முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே அவ்வப்போது திருப்பதிக்கு வந்து தரிசனம் செய்து வந்த நிலையில் நேற்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அவர்களும் திருப்பதி ஏழுமலையானை குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய சனிக்கிழமை இரவு பெங்களூரில் இருந்து காரில் சாலை மார்க்கமாக சிறிசேனா திருப்பதிக்கு வந்த சிறிசேனா குடும்பத்தினர்களை ஆந்திர வனத்துறை அமைச்சர் கோபால கிருஷ்ணா ரெட்டி, எஸ்.பி. ஜெயலட்சுமி ஆகியோர் வரவேற்றனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திருமலைக்கு சென்ற அதிபர் சிறிசேனாவுக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். நேற்று முன் தினம் இரவு திருமலையில் தங்கிய சிறிசேனா நேற்று காலை ஏழுமலையானை தரிசித்தார்.

பின்னர் தரிசனம் முடிந்ததும் உடனடியாக புறப்பட காரில் ஏறினார். ஆனால் அவர் கார் ஓட்டுநர் தரிசனம் செய்யச் சென்றதால் சிறிசேனா சுமார் 20 நிமிடங்கள் வரை ஓட்டுநருக்காக காரிலேயே காத்திருந்தார். அதன் பின்னர் போலீஸ் உயர் அதிகாரிகள் ஓட்டுநரை அழைத்து வந்தனர். இந்த சம்பவம் திருமலையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை அதிபர் திருப்பதி வருவதை திருப்பதி போலீஸாருக்கு கூட தகவல் தெரிவிக்காமல் தேவஸ்தான அதிகாரிகள் மிக ரகசியமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply