ஹிலாரி வெற்றி பெற வேண்டி 1000 தேங்காய்கள் உடைக்கும் இலங்கை தமிழர்கள்

ஹிலாரி வெற்றி பெற வேண்டி 1000 தேங்காய்கள் உடைக்கும் இலங்கை தமிழர்கள்

sivaji-lingamஅமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறவுள்ளதை அடுத்து இந்த தேர்தல் முடிவை உலக நாடுகள் அனைத்தும் எதிர்நோக்கியுள்ளன. தொடக்கத்தில் வந்த கருத்துக்கணிப்புகள் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக இருந்தாலும் கடைசிகட்ட கருத்துக்கணிப்பில் டொனால்ட் டிரம்புக்கும் ஆதரவு பெருகியுள்ளதால் போட்டி கடுமையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற வேண்டும் என்று இலங்கை தமிழர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் பிரசித்திப் பெற்ற கந்தசாமி கோயிலில் இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள், ஹிலாரி வெற்றி பெற வேண்டி 1000 தேங்காய்களை உடைக்க முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியபோது, “வருகின்ற நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி வெற்றி பெற வேண்டி 1000 தேங்காய் உடைக்கப்படவுள்ளன. இலங்கைத் தமிழர்களாகிய நாங்கள் ஹிலாரியின் வெற்றியை எதிர்பார்க்கிறோம்.

ஹிலாரியின் வெற்றி இலங்கையில் சிறுப்பான்மையினராக உள்ள தமிழ் மக்களுக்கு மிக முக்கியமானது. இலங்கையில் நிலவும் அரசியல் பிரச்சனைகளுக்கு அமெரிக்காவின் தலையீடு முக்கியம்” என்று கூறினார்.

Leave a Reply