இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட். ஆஸ்திரேலியா பதிலடி
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் தோல்வி அடைந்த நிலையில் 3வது டெஸ்ட் போட்டியில் நிதானமாக விளையாடி வெற்றியை நோக்கி சென்று வருகிறது.
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி 355 ரன்கள் குவித்தது. சண்டிமால் மற்றும் டிசில்வா சதம் அடித்தனர்.
இந்த போட்டியிலும் ஆஸ்திரேலியாவுக்கு தோல்வி கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கேப்டன் ஸ்மித் மற்றும் மார்ச் ஆகியோர் சதமடித்து ஆஸ்திரேலியா அணிக்கு வலுவான ஸ்கோரை சேர்த்தனர். அந்த அணி முதல் இன்னிங்சில் 379 ரன்கள் குவித்துள்ளது.
24 ரன்கள் பின் தங்கியுள்ள இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்துள்ளது. இன்றும் நாளையும் மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.