ஷிகர் தவான், தோனி அதிரடி வீண்: 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி

ஷிகர் தவான், தோனி அதிரடி வீண்: 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி

சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா கொடுத்த 322 என்ற இலக்கை மிக எளிதாக அடைந்து இலங்கை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிகர் தவான் சதம், ரோஹித்சர்மா, தோனி அதிரடி ஆட்டம் வீண் ஆனது

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 321 ரன்கள் எடுத்தது. தவான் அபாரமாக விளையாடி 125 ரன்களும், ரோஹித் சர்மா 78 ரன்களும், தோனி 63 ரன்களும் குவித்தனர்.

322 என்ற இமாலய இலக்கை ஆரம்பம் முதலே அடித்து ஆடிய இலங்கை மிக எளிதில் அதாவது 48.4 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து பெற்று, அபார வெற்றி பெற்றது. மெண்டிஸ் 89 ரன்களும், குணதிலக 76 ரன்களும், கேப்டன் மாத்யூஸ் 52 ரன்களும் அடித்தனர்.

இந்திய வெற்றியின் மூலம் B பிரிவில் உள்ள அனைத்து நாடுகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால் அரையிறுதிக்கு செல்லும் அணி எவை எவை என்பது அடுத்தடுத்த போட்டிகளின் முடிவினை பொறுத்து உள்ளது.

Leave a Reply