இலங்கைக்கு எதிரான 20 ஓவர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணியின் அபார பந்துவீச்சு காரணமாக இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் திணறினர். பின்னர் 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த நியூசிலாந்து மளமளவென தங்கள் விக்கெட்டுக்களை இழந்துகொண்டே வந்தது. வெறும் 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 59 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
இலங்கையின் பந்துவீச்சாளர் ஹெரத் அபாரமாக பந்துவீசி 5 முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
ஸ்கோர்போர்டு
இலங்கை
குசல் பெரேரா (சி) லுக் ரோஞ்ச் (பி) பவுல்ட் 16
தில்ஷன் (சி) லுக் ரோஞ்ச் (பி) பவுல்ட் 8
மஹேலா ஜெயவர்த்தனே (பி) நாதன் மெக்கல்லம் 25
சங்கக்கரா (சி) ஆண்டர்சன் (பி) பவுல்ட் 4
திரிமன்னே(சி) மார்ட்டின் கப்தில் (பி) நீஷம் 20
மேத்யூஸ் (சி) லுக் ரோஞ்ச் (பி) மெக்லகன் 6
திசரா பெரேரா (சி) வில்லியம்சன் (பி) மில்ஸ் 16
குலசேகரா (சி) நாதன் மெக்கல்லம் (பி) மெக்லகன் 0
செனநாயகே (சி) வில்லியம்சன் (பி) நீஷம் 17
ஹெராத் (நாட்–அவுட்) 1
மலிங்கா (பி) நீஷம் 0
எக்ஸ்டிரா 6
மொத்தம் (19.2 ஓவர்களில் ஆல்–அவுட்) 119
விக்கெட் வீழ்ச்சி: 1–20, 2–23, 3–35, 4–65, 5–81, 6–85, 7–92, 8–116, 9–119.
பந்து வீச்சு விவரம்:
மில்ஸ் 4–0–30–1
பவுல்ட் 4–0–20–3
ஆண்டர்சன் 3–0–13–0
மெக்லகன் 4–0–24–2
நீஷம் 2.2–0–22–3
நாதன் மெக்கல்லம் 2–0–8–1
நியூசிலாந்து
மார்ட்டின் கப்தில் (ரன்–அவுட்) 5
வில்லியம்சன் (ரன்–அவுட்) 42
பிரன்டன் மெக்கல்லம் (ஸ்டம்பிங்) சங்கக்கரா (பி) ஹெராத் 0
ராஸ் டெய்லர் எல்.பி.டபிள்யூ (பி) ஹெராத் 0
நீஷம் (பி) ஹெராத் 0
லுக் ரோஞ்ச் எல்.பி.டபிள்யூ (பி) ஹெராத் 2
நாதன் மெக்கல்லம் (சி) மேத்யூஸ் (பி) செனநாயகே 2
மில்ஸ் எல்.பி.டபிள்யூ (பி) செனநாயகே 4
பவுல்ட் (சி) ஜெயவர்த்தனே (பி) ஹெராத் 3
மெக்லகன் (நாட்–அவுட்) 0
ஆண்டர்சன் (காயத்தால் ஓய்வு) 0
எக்ஸ்டிரா 2
மொத்தம் (15.3 ஓவர்களில் ஆல்–அவுட்) 60
விக்கெட் வீழ்ச்சி: 1–18, 2–18, 3–23, 4–23, 5–29, 6–33, 7–51, 8–60, 9–60.
பந்து வீச்சு விவரம்:
குலசேகரா 3–0–15–0
மேத்யூஸ் 4–0–26–0
ஹெராத் 3.3–2–3–5
மலிங்கா 2–0–13–0
செனநாயகே 3–0–3–2