இலங்கை: ஐ.நா சபைக்கானஅமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி சமந்தா பவருடன் இரா.சம்பந்தன் சந்திப்பு

இலங்கை: ஐ.நா சபைக்கானஅமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி சமந்தா பவருடன் இரா.சம்பந்தன் சந்திப்பு

srilankaஇலங்கை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று தலைநகர் கொழும்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி சமந்தா பவரை, சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது  தமிழ் அரசியல் கைதிகள் உள்பட தமிழர்கள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் ஆலோசனை செய்யப்பட்டதாகவும்,  இதுகுறித்த ஐ.நா.வின் தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற, மனித உரிமை பேரவையும், அமெரிக்காவும் செயல்பட, இரா.சம்பந்தன் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ராணுவம் குறைக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவிடம் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சமந்தா பவர், ‘இலங்கையில் 26 ஆண்டுகள் நடந்த உள்நாட்டு போரில் தீவிரவாதத்தை வெற்றிகரமாக முறியடித்து பிற நாடுகளுக்கு முன்னோடியாகத் இலங்கை திகழ்கிறாது. முன்னாள் அதிபர் ராஜபக்ஷேயின் ஆட்சிக்காலத்தில் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை நடத்த அமெரிக்கா வலியுறுத்தும் என்று கூறினார்.

இந்நிலையில் இன்று சமந்தாபவர் யாழ்ப்பாணம் பகுதிக்கு சென்று அங்கு போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்தித்து உரையாடவுள்ளார். பின்னர் அவர் அதிபர் சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவையும் சந்தித்து பேசுகிறார். சமந்தா பவரின் வரவால் இலங்கையில் முழு அமைதி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply