இலங்கை பிரதமரின் சீனப் பயணம். கூர்ந்து கவனிக்கும் இந்தியா
இலங்கை மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் நெருங்கிய நட்பில் இருக்கும் நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரம்சிங்கே சீனாவிற்கு பயணம் செய்யவுள்ளார். அரசுமுறை பயணமாக நாளை மறுநாள் சீனா செல்லும் அவர் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லீ கெகியாங் ஆகியோர்களை சந்தித்து பேசுகிறார்.
இலங்கையில் ஏற்கனவே சீனாவின் உதவியால் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அந்த திட்டங்கள் குறித்தும் மேலும் சில திட்டங்களுக்கு நிதியுதவி பெறுவது குறித்தும் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆலோசனை நடத்துவார் என இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இலங்கை பிரதமரின் இந்த சீனப் பயணம் இருநாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக அமையும் என்று கூறப்படுகிறது. இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு மற்றும் அவர்கள் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையை இந்தியா கூர்ந்து கவனித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.