தினகரன் கொடுத்த பதவியை மறுக்கும் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ
அதிமுக தற்போது முதல் ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, தினகரன் அணி என மூன்று அணியாக செயல்பட்டு வருகிறது. ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி இணைய தினகரன் ஆகஸ்ட் 4 வரை கெடு விதித்திருந்தார். இதற்குள் இணையவில்லை என்றால் அதிரடி நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றுடன் இந்த கெடு முடிவடைந்ததால் புதிய அதிமுக நிர்வாகிகள் பட்டியலை அவர் வெளியிட்டிருந்தார். அதில் நாஞ்சில் சம்பத் கொள்கை பரப்பு செயலாளராகவும் மற்றவர்களுக்கு ஒருசில பதவிகளும் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலைஇல் தினகரன் கொடுத்த கட்சி பதவி தனக்கு தேவையில்லை என்று ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனி அறிவித்துள்ளார். ஜெயலலிதா கொடுத்த எம்எல்ஏ பதவியே தனக்கு போதும் என்றும், டிடிவி தினகரன் அளித்த கட்சி பதவி வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தினகரன் கொடுத்த பதவியை அவரது ஆதரவாளரே மறுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.