ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவு கூறுவது என்ன? அதிமுகவுக்கு மாற்று கட்சி எது?

srirangamபிரதமர் நரேந்திர மோடியின் அலை இந்தியா முழுவதும் வீசினாலும் தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை தவிர பாரதிய ஜனதா கட்சி உள்பட வேறு கட்சிகள் தலையெடுக்க வாய்ப்பே இல்லை என்பதைத்தான் ஸ்ரீரங்கம் தேர்தல் முடிவுகள் மெய்ப்பித்துள்ளது.

அதிமுகவுக்கு போட்டி நாங்கள்தான் என்றும், திமுகவுக்கு இந்த தேர்தலில் பின்னுக்கு தள்ளப்படும் என்றும் பாஜக இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால் அந்த கட்சியால் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை என்பதுதான் பரிதாபம். திமுக தோல்வி அடைந்தாலும் டெபாசிட் தொகையை பெற்றுவிட்டது என்பது அந்த கட்சிக்கு ஒரு ஆறுதல்தான்

ஸ்ரீரங்கத்தில் பணநாயகமும் அதிகார பலமும் வெற்றி பெற்றுவிட்டதாக தமிழிசை செளந்திரராஜனும் பிற எதிர்க்கட்சி தலைவர்களும் தற்போது தோல்விக்கான காரணங்களை கூறினாலும் தமிழகத்தில் தற்போதைக்கு அதிமுகவுக்கு சரியான போட்டி கட்சி இல்லை என்பதுதான் உண்மை என்றே அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் 1,51,561 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். இவரை அடுத்து தி.மு.க வேட்பாளர் ஆனந்த் 55,045 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை விட சுமார் 96,516 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்

Leave a Reply