உன் ரெண்டாவது புருஷனை எனக்கு நல்லா தெரியும்: அமலாபாலுக்கு ஷாக் கொடுத்த ஸ்ரீரெட்ட்

உன் ரெண்டாவது புருஷனை எனக்கு நல்லா தெரியும்: அமலாபாலுக்கு ஷாக் கொடுத்த ஸ்ரீரெட்ட்

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் உள்ள பிரபல்ங்களை ஆட்டிப் படைத்து வருகிறார் என்பது தெரிந்ததே. பிரபல நடிகர்கள்ம் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகை அதிர வைத்தார்

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை அமலாபால் பஞ்சாப் பாடகர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளிவந்தது. முதல் கணவரான இயக்குனர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற அமலாபால், பஞ்சாப் பாடகரை காதலித்துக் கொண்டிருப்பதாகவும், விரைவில் இவர்களது திருமணம் நடக்கும் என்றும் கூறிய நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் வைரலாகியது

இந்த நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி இந்த திருமணம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து கூறிய போது ’நடிகை அமலாபால் கவலைப்பட வேண்டாம். உன் பஞ்சாபி கணவன் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வார். பஞ்சாபியர்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவர்களை நம்பலாம்’ என்று தெரிவித்துள்ளார். அமலாபால் மற்றும் அவரது கணவர் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது

 

Leave a Reply