தங்க மினியேச்சரில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம். நகைத்தொழிலாளி சாதனை.

rajapalayamராஜபாளையம் நகை தொழிலாளி ஒருவர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோயிலின் கோபுரத்தை 0.035 மில்லி கிராம் அளவுள்ள தங்கத்தில் வடிவமைத்து சாதனை புரிந்துள்ளார். அவருக்கு பல்வேறு இடங்களில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ராஜபாளையம் பூபால்பட்டி தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் அவரது வீடு அருகே  தங்கநகை பட்டறை  ஒன்றை வைத்து உள்ளார். இவர் மினியேச்சர் வடிவில் சிறு பொருட்களை செய்வதில் வல்லவர். இவர் சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் கோபுரத்தை மினியேச்சர் மூலம் 0.035 மில்லிகிராம் தங்கத்தில் செய்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு அப்பகுதியில் உள்ள மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ராமச்சந்திரன் ஏற்கனவே மினியேச்சரில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் கிண்ணம், உலக்ககோப்பை கால்பந்து கோப்பை, இந்திய தேசிய கொடி, ஆகியவற்றை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் செய்த பொருட்களை லென்ஸ் மூலம் மட்டுமே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply