ஈரோடு மாவட்டம் 98.04% தேர்ச்சி பெற்று முதலிடத்திலும், 97.98% பெற்று விருதுநகர் மாவட்டம் 2-வது இடத்திலும், 97.62% பெற்று திருச்சி மாவட்டம் 3-வது இடத்திலும் உள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 41 மாணவ- மாணவிகள் 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
192 மாணவ- மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர்.
540 மாணவ-மாணவிகள் 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் படித்த 19 மாணவ- மாணவிகள் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
வாழப்பாடியை சேர்ந்த ஜெயநந்தனா, பட்டுக்கோட்டையை வைஷ்ணவி, பெரம்பலூரை பாரதிராஜா ஆகியோர் 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பிற மொழிகளில் படித்த 5 மாணவர்கள் 500க்கு 500 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கணிதப் பாடத்தில் 27 ஆயிரத்து 134 மாணவ- மாணவிகள் சதம் அடித்துள்ளனர்.
அறிவியல் பாடத்தில் 1,13,853 மாணவ- மாணவிகள் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
மாணவிகளில் 94.5 சதவீதமும், மாணவர்களில் 90.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
51,629 மாணவ- மாணவிகள் சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்