SSC தேர்வு எழுதப்போறீங்களா? இதோ உங்களுக்கு ஒரு முக்கிய தகவல்

SSC Staff Selection Commission தேர்வுக்கு கடந்த பிப்ரவரி 1 ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் மார்ச் 7 ம் தேதி வரை பதிவு செய்யலாம். பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குப் பதிவு செய்ய ssc.nic.in என்ற இணைய தளத்தில் காணலாம்.

தற்போது சுமார் 5000 காலிப் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள நிலையில் இந்த தேர்வுக்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்பதை பார்ப்போம்.

விண்ணப்பம் பதிவு தொடங்கிய நாள்: பிப்ரவரி 1, 2022
விண்ணப்பம் பதிவு முடியும் நாள்: மார்ச் 7, 2022
ஆன்லைன் கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாள்: மார்ச் 8, 2022
Offline challan பதிவிறக்கும் செய்வதற்கான இறுதி நாள்: மார்ச் 9, 2022
Offline challan மூலம் கட்டணம் செலுத்தி முடிப்படதற்கான இறுதி நாள்: மார்ச் 10, 2022
ஆன்லைனில் விண்ணப்பப் படிவத் திருத்தம் : மார்ச் 11, 2022 – மார்ச் 15, 2022
கணினியில் நடத்தப்படும் முதற்கட்ட தேர்வு நாள்: மே 2022
(நிலை -1) தேர்வு நாள் : பின்னர் அறிவிக்கப்படும்
தேர்வுக்கான தகுதிகள்:

இந்தத் தேர்வுகளில் போட்டியிட விரும்புகிறவர்கள் Staff Selection Commission இணைய தளத்தில் கல்வித் தகுதி, வயது வரம்பு முதலான விவரங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த தேர்வு எழுத விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத் தொகையை BHIM UPI, ஆன்லைன் பேங்கிங் ஆகியவற்றின் மூலமும், Visa, Mastercard, Maestro, RuPay ஆகிய நிறுவனங்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் மூலமாகவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பணச்சீட்டு மூலமாகவும் செலுத்தலாம். பெண் தேர்வர்கள், பட்டியல் சாதி (எஸ்.சி), பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி), மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு உண்டு.